அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் எனும் ஆஸ்கார் விருதுக்கான நடிகர்களின் பிரத்யேக குழுவில் இடம் பிடித்த ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்

அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் எனும் ஆஸ்கார் விருதுக்கான நடிகர்களின் பிரத்யேக குழுவில் இடம் பிடித்த ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்

அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்குவதற்கான மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் குழுவில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் இணைந்திருக்கிறார்.

அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அண்மையில் புகழ்பெற்ற பான் இந்திய சூப்பர் ஸ்டாரான ராம்சரண், மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கார் விருதுகளை வழங்கும் பொறுப்பு மிக்க அகாடமி விருதுகளை மேற்பார்வையிடும் நடிகர்களுக்கான அணியில் இணைகிறார்.

94 ஆவது அகாடமி விருதுகளில் ‘ஆர் ஆர் ஆர் ‘ எனும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தின் சமீபத்திய வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு..’ என்ற மறக்க முடியாத பாடலுக்காக… சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. திரைப்பட துறையில் அவரது விதிவிலக்கான திறமைகள் மற்றும் ஈர்க்கக்கூடிய பணியை அங்கீகரிப்பதற்காக ராம் சரண்- தற்போது நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

அகாடமி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதற்கான உற்சாகமான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ராம்சரணின் அறிமுகத்தை கொண்டாடுவதுடன் மட்டுமல்லாமல் மோஷன் பிக்சர் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. இது தொடர்பாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ” அவர்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் நம்பகத் தன்மைக்கான அர்ப்பணிப்பு மூலம் இந்த நடிகர்கள் நம் இதயங்களிலும், மனதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை நமக்கு பரிசளிக்கிறார்கள். அவர்களின் கலை வடிவத்தின் தேர்ச்சி சாதாரண தருணங்களை கூட.. ஆசாதாரணமான சினிமா அனுபவங்களாக மாற்றுகிறது. மனித உணர்ச்சிகளின் ஆழம் மற்றும் சிக்கலான தன்மைக்கான நமது பாராட்டுகளை வளப்படுத்துகிறது. மேலும் அகாடமியில் நடிகர்கள் பட்டியலுக்கு இந்த திறமையான கலைஞர்களை வரவேற்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் இந்த நடிகர்களின் குழுவில்…

லஷானா லிஞ்ச்
ராம் சரண்
விக்கி க்ரிப்ஸ்
லூயிஸ் கூ டின்-லோக்
கேகே பால்மர்
சாங். சென்
சகுரா ஆண்டோ
ராபர்ட் டேவி
மற்றும் பலர்.

இது தொடர்பானப் பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ள கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும். https://www.instagram.com/p/CzHvIyzv7KQ

பதினாறு ஆண்டுகளுக்கும் மேலான திரைத்துறை வாழ்க்கையில் ராம் சரண் தனது குறிப்பிடத்தக்க நடிப்பு, திறமை மற்றும் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.‌ அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் நடிகர்களின் பிரிவில் அவர் இணைக்கப்பட்டிருப்பது… உலகளாவிய திரையுலகில் அவருடைய செல்வாக்கிற்கு சான்றாக திகழ்கிறது.

அடுத்தடுத்து சிறந்த நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் ராம் சரண் தற்போது ‘கேம் சேஞ்சர்’ எனும் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான எஸ். ஷங்கர் இயக்கியிருக்கிறார். மேலும் ராம்சரணுடன் கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ராம்சரணின் திரையுலக பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என உறுதியாக தெரிய வருகிறது.‌

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *