‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்  ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் ‘சூர்யா 43’ படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

சூர்யா -சுதா கொங்கரா – ஜீ.வி. பிரகாஷ் குமார் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ‘சூர்யா 43’ திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்திருக்கிறது.
National Award winning Soorarai Pottru team comes together again for Suriya’s 43rd film!
Sudha Kongara, who directed the critically acclaimed, National Award-winning blockbuster film ‘Soorarai Pottru’, will again be joining hands with actor Suriya for his 43rd film, the music of which is to be scored by music director G V Prakash.

Interestingly, this film will hold the distinction of being G V Prakash’s 100th film as music director.

It is an undeniable fact that Soorarai Pottru holds a significant position in actor Suriya’s illustrious acting career and the news that the exceptional core team that made Soorarai Pottru — which swept that year’s National Awards winning  awards for Best Actor, Best Background Score, Best Picture, Best Actress and Best Screenplay, will again be coming together to make Suriya’s 43rd film is sure to thrill his fans to bits.  Dulquer Salmaan, Nazriya Fahadh and Vijay Varma are also a part of the star cast.

The upcoming film, which is tentatively being referred to as #Suriya43, is to be produced by Jyotika, Suriya and Rajsekar Karpoorasundarapandian on behalf of Suriya’s own production house, 2D Entertainment.

The news of Suriya, Sudha Kongara, and G V Prakash coming together again for a film, has raised expectations, even before it goes on the floors.

https://x.com/2D_ENTPVTLTD/status/1717489216601690223?s=20

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *