‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண், இந்திய கிரிக்கெட்டின் நாயகனான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு வியப்பில் ஆழ்த்தும் பின்னூட்டங்களுடன் வைரலாகி வருகின்றன.

இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான  மகேந்திர சிங் தோனியை சந்தித்தார்.  மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராம் சரண் பகிர்ந்திருந்தார். அதனுடன் ‘இந்தியாவின் பெருமையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்றும் பதிவிட்டிருந்தார்.

ராம்சரனின் ரசிகர்கள் அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘கேம் சேஞ்சர்’ எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில்.. ராம் சரணும், எம் எஸ் தோனியும் சந்தித்து கொண்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், அதனை கொண்டாடி வருகின்றனர்.‌

அந்த புகைப்படத்தில் ராம் சரண் -இந்திய ராணுவ வீரர்கள் அணியும் பச்சை வண்ண சட்டையும், மகேந்திர சிங் தோனி -நீல வண்ண சட்டையும் அணிந்து தோன்றுவது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனைக் கண்ட இருவரது ரசிகர்களும் ‘ஒரே சட்டகத்தில் இரண்டு கடவுள்கள்’ என்றும்,  ‘இந்திய சினிமாவின் பெருமையும், இந்திய கிரிக்கெட்டின் பெருமையும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும், ‘வெள்ளித்திரை நாயகனும், மைதான நாயகனும் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்கிறார்கள்’ என்றும், ‘இந்தியாவின் இரண்டு ராசியான  ஜொலிக்கும் நட்சத்திரங்கள்’ பல்வேறு பின்னூட்டங்களை பதிவிட்டு தங்களது பேரன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.“Two gods in one frame” and “Two GOATS of India.” – Fan Comments on MS Dhoni’s and Ram Charan’s images takes the internet by storm !
Pride Of Indian Cricket meets the Pride Of Indian Cinema
When two powerful players meet – One On Field and One On-screen
Global star Ram Charan recently made his way to Mumbai for a brand shoot, setting the stage for an unforgettable meeting with the legendary former Indian cricket captain, Mahendra Singh Dhoni.

In a delightful Instagram post, Ram Charan shared this moment with his fans with the caption, “So happy to meet India’s pride.” This meeting India’s two remarkable players, one on field and one on screen, resonated deeply with fans across the nation.

The photograph captured Ram Charan in a sleek army green shirt and Mahendra Singh Dhoni in a casual blue polo, both sharing genuine smiles.

Fans were elated by this memorable moment, as they commented “Two gods in one frame” and “Two GOATS of India.”

As fans eagerly await Ram Charan’s upcoming movie, ‘Game Changer,’ alongside the talented Kiara Advani, this meeting underscores the exceptional talent and pride that both Indian cricket and Indian cinema bring to the nation. It’s a moment of celebration and recognition for these two iconic figures, symbolizing their remarkable achievements.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *