இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் “தருணம்” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது !!
ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், “தேஜாவு” படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் “தருணம்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ முடிந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
‘தேஜாவு’ படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் இது. முழுக்க முழுக்க ரொமான்டிக் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் முதல் நீ முடிவும் நீ படம் மூலம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன் தாஸ் நாயகனாக நடிக்க, தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும், பிரபல இளம் நடிகை ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடித்துள்ளார்.
பெரும் பொருட்செலவில் ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் – ஈடன் இப்படத்தைத் தயாரிக்க, ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது.
இப்படத்தின் படிப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் எஞ்சியுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
நடிகர்கள்
கிஷன் தாஸ்
ஸ்மிருதி வெங்கட்
ராஜ ஐயப்பன்
பாலசரவணன்
தொழில் நுட்ப கலைஞர்கள்
எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் இ சித்தார்த்
கலை இயக்குநர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ், ஈடன் (ஸென் ஸ்டுடியோஸ்)
இணை தயாரிப்பு – ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)