வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம்
லெஸ்பியன் கதையை போல்டாக சொல்ல வந்திருக்கும் படம்.
இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழும் இரண்டு இளம் பெண்கள், எதிராரத ஒருசூழலில் சந்தித்து நண்பர்களாக பழகி வருகின்றனர் , இதன் பின் தங்களை அறியாமலே காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள், இவர்களின் காதலை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லை புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது.
அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஷகிரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார், வினோதா கதாபாத்திரத்தில் வரும் ஸ்ருதி பெரியசாமியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இருவருக்குமே இருக்கிறது என்பதை அவர்கள் நடித்திருக்கும் காட்சிகள் பறைசாற்றுகின்றன
லெஸ்பியன் உறவை மட்டுமே மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும், இயக்குனர் இந்தக் கதையை தேர்வு செய்தால் அதற்கான விளக்கத்தை கூறாமல் இஸ்லாமிய மத பெண்களின் வாழ்வை குற்றப் படுத்துமாறு அமைத்துள்ளார், இது இரண்டுக்கும் இடையே இயக்குனர் பெரிய குழப்பத்தில் மாட்டிக் கொண்டார், ஓரின காதல் எப்படி மற்றும் எதனால் உருவாகிறது என சொல்லாமல் இஸ்லாமிய பெண்களின் சுதந்திரத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே” திரைப்படத்தின் படி, எல்லோருக்குமான வாழ்வு எங்கிருந்துனாலும் தொடங்கலாம், சிலரின் வாழ்வில் அது இப்படியும் தொடங்கலாம் என்பதை துணிச்சலாக பேசி இருந்தாலும்
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள் இருக்கும் அதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவரவர் உரிமை, ஆனால் இயக்குனர் அதை சொல்லாமல் இதை ஓரினச் சேர்க்கை கதையென சொல்லி தப்பிதிருக்கிரார், கதையின் கருவே என்னவென்று ஒரு குழப்பத்தில் இருந்தது, படத்திற்கு இழப்பு.