மெகாஸ்டார் சிரஞ்சீவி-வசிஷ்டா-UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் – மெகா 157 #Mega157 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இனிதே துவங்கியது

மெகாஸ்டார் சிரஞ்சீவி-வசிஷ்டா-UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் – மெகா 157 #Mega157 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இனிதே துவங்கியது

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் மெகாஸ்டார் ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டமாக அமைந்தது, முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் #Mega157 திரைப்படம், மெகாஸ்டார் பிறந்த நாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டது. இயற்கையின் ஐந்து கூறுகளை  காட்டும்  இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர்- சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் பெரும் அதிர்வை உருவாக்கி வருகிறது. இந்த கற்பனை சாகசத்தை UV கிரியேஷன்ஸ் எனும் வெற்றிகரமான பேனரின் கீழ் வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர்.  

இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவங்குவதாக படத்தின் இயக்குநர் வசிஷ்டா அறிவித்துள்ளார். சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

“மெகா படத்திற்கு ஒரு மெகா தொடக்கம் 

????

#MEGA157 ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்குகிறோம்! விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு சினிமா சாகசத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளோம்! @KChiruTweets @UV_Creations @NaiduChota,” என்று வசிஷ்டா ட்வீட் செய்துள்ளார், அத்துடன் அவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி, அவரது தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருடன் இணைந்த ஒரு பிரத்யேக புகைப்படத்தையும் இந்த டிவிட்டுடன்  பகிர்ந்துள்ளார்.

இம்மாபெரும் பிரமாண்ட படைப்பில் பங்கேற்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிகர் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில் நுட்ப குழு
எழுத்து & இயக்கம் : வசிஷ்டா
தயாரிப்பாளர்கள் : வம்சி, பிரமோத், விக்ரம்
தயாரிப்பு நிறுவனம் : UV கிரியேஷன்ஸ்.
ஒளிப்பதிவு – சோட்டா K நாயுடு
Megastar Chiranjeevi, Vassishta, UV Creations – Mega Mass Beyond Universe – Mega157 Pre-production Works Begin
It was a mega celebration for mega fans on megastar Chiranjeevi’s birthday as his most expensive movie #Mega157 with director Vassishta under the leading production banner of UV Creations was announced on the special occasion. The announcement poster that showed five elements of nature alone created ripples on the social media & internet. This fantasy adventure will be mounted on a huge scale by Vamsi, Pramod, and Vikram of UV Creations.

Today, the film’s director Vassishta announced to have begun the pre-production formalities of the movie. He also divulged that Chota K Naidu would crank the camera.

“A MEGA Start to the MEGA Film 

????

#MEGA157 is coming to life as we kick-off the pre-production works! We are ready to take you all on a cinematic adventure soon! @KChiruTweets @UV_Creations @NaiduChota ,” tweeted Vassishta who shared a picture of him along with megastar Chiranjeevi, his producer and DOP.

The makers of this magnum opus will announce the other cast and crew of the movie soon.

Cast: Megastar Chiranjeevi

Technical Crew:
Writer & Director: Vassishta
Producers: Vamsi, Pramod, Vikram
Banner: UV Creations
DOP: Chota K Naidu

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *