கதை – ஒரு மருத்துவமனை அங்கு அட்மிட் ஆகும் மூன்று நோயாளிகள் அவர்களின் உணர்வுப்போராட்டம் தான் வான் மூன்று
ஆதித்யா தன்னை காதலி ஏமாற்றியதால் விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே சமயம் அம்மு அபிராமி காதலன் தன்னை விட்டு பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் விஷம் அருந்தி அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.இவர்கள் இருவரும் எதிரெதிர் பெட்டில் இருக்கின்றனர். ஆதித்யா – அம்மு அபிராமி தனது கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்கினார்களா? இல்லையா?
பிராமணப் பெண்ணான அபிராமி வெங்கடாசலம் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதலன் வினோத் கிஷன் திருமணம் செய்து கொள்கிறார். . இந்நிலையில் அபிராமிக்கு மூளையில் ஒரு கட்டி மூலம் மிகப்பெரிய துயரத்தை சந்திக்கின்றனர் அபிராமி வெங்கடாசலம் தான் சாவதற்குள் தந்தையை பார்க்க ஆசைப்படுகிறார். வினோத் கிஷன் மனைவி அபிராமி வெங்கடாசலம் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா?
60 வயதை கடந்த டெல்லி கணேஷ் – லீலா தம்பதியினரின்.ஒரே மகன் இவர்களை விட்டுச் சென்று விட, உனக்கு நான் எனக்கு நீ என்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் மனைவி லீலாவிற்கு புற்று நோய் வர, வசதியாக இருக்கும மகன் காப்பாற்ற மறுக்கிறார். ,இறுதியில் டெல்லி கணேஷ் மனைவி லீலா உயிரை காப்பாற்றினாரா? என்பதே ’வான் மூன்று’ படத்தின் மீதிக்கதை.
ஆதித்யாபாஸ்கர் அம்முஅபிராமி இருவரும் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சிக்கும் கதையில் பொருத்தமான இருக்கிறார்கள். காதல் மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் வினோத் கிஷன் மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம் தம்பதிகள் காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
டெல்லி கணேஷ் நடிப்பில் வயதான கணவராக வாழ்ந்திருக்கிறார். தன் மனைவியை காப்பாற்ற வேண்டுமே, தன்னிடம் பணம் இல்லையே என்று பரிதவிக்கும் போது நம் வீட்டில் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார். எனக்குப் பிறகு இவர் என்ன ஆவார்? என எண்ணும் லீலாசாம்சன். காண்போரைக் கலங்க வைத்துவிடுகிறார்கள்.
ஆர் 2 பிரதர்ஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ். ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நடக்கும் கதை என்றாலும் கதையில் இருக்கும் காதலைக் காட்சிகளில் வெளிப்படுத்தி வரவேற்பை பெறுகிறார்
காதல் எப்போதும் அழிவதில்லை அது ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்த கதையின் மூலம் எல்லோரும் ரசிக்கும் விதத்தில் ஒரு அழகான காதல் கதையை கொடுத்த இயக்குனர் ஏ எம் ஆர் முருகேஷ்க்கு பாராட்டுக்கள்.படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் எந்த ஒரு இடத்திலும் அதிகமாக நடிக்காமல், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் வான் மூன்று மனதை வருடி தைரியம் சொல்லும் அழகான சினிமா.