மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் #VT14 படத்தில் நடிகை நோரா ஃபதேஹி இணைந்துள்ளார்

0

பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள,  மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். #VT14 திரைப்படம் வருண் தேஜ்  திரை வரலாற்றில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும்  பிரமாண்ட திரைப்படமாகும்.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது  பிரபல நடிகை நோரா ஃபதேஹி இப்படத்தில் இணைந்துள்ளார்.   பல அட்டகாசமான டான்ஸ் நம்பர்களால் புகழ்பெற்ற நோரா ஃபதேஹி  #VT14 இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஒரு அட்டகாசமான டான்ஸ் நம்பரில் கலக்கவுள்ளார்.

#VT14 திரைப்படத்தின் கதை விசாகப்பட்டினத்தில் 1960களின் காலகட்ட பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. 60களின் சூழலையும்  அந்த உணர்வையும் கொண்டு வர படக்குழு கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறது.

இம்மாதம் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் இப்படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதே தேதியில் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் அறிவிக்கவுள்ளனர்.


Nora Fatehi In Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments #VT14


Mega Prince Varun Tej’s 14th film to be directed by Karuna Kumar of Palasa fame will be produced by Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala on a high budget under the banner of Vyra Entertainments. #VT14 will be the highest-budgeted movie for Varun Tej.

Meenakshi Chaudhary is considered to play the lead actress in the movie. Another update is that Nora Fatehi is part of the project. The actress who is popular for doing special numbers will be playing a vital role in #VT14. She will also shake her leg in a special number.

The movie #VT14 is set in the period backdrop of the 1960s in Vizag. The team will be taking extra care to get the milieu and the feel of the 60s.

The movie will be launched in a grand manner on the 27th of this month in Hyderabad. The makers will announce the rest of the cast and crew on the same date.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here