பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பிரமாண்டமாக தொடங்கியது!

பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பிரமாண்டமாக தொடங்கியது!

உஸ்தாத் ராம் மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அவர்களது முந்தைய கல்ட் பிளாக்பஸ்டர் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலுக்காக இம்முறை இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘டபுஸ் ஐஸ்மார்ட்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இம்முறை இரட்டிப்பு மாஸாகவும், இரட்டிப்பு பொழுதுபோக்காகவும் இந்தப் படம் இருக்கும். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை பூரி கனெக்ட்ஸில் தயாரிக்கவுள்ளனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் பிரமாண்டமான தொடக்க விழா இன்று படக்குழு மற்றும் சில சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சார்மி கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஹீரோ ராம் பொதினேனியின் முதல் காட்சியை இயக்கினார். இதில், ‘ஐஸ்மார்ட் ஷங்கர் அலைஸ் டபுள் ஐஸ்மார்ட்’ என்று ஸ்டைலாக படமாக்கப்பட்ட முதல் காட்சியில் ராம் படத்தின் பெயரைச் சொன்னார். ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இம்மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ராமுக்கும், பூரி ஜெகந்த்துக்கும் ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ மிகவும் சிறப்பான படமாகவும், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால், இந்தப் படத்தைச் சுற்றியுள்ள உற்சாகமும் எதிர்பார்ப்பும் மிகப்பெரியதாக உள்ளது. பூரி ஜெகன்நாத்தின் இந்தக் கதை மிகப் பெரிய பட்ஜெட்டில் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் தயாராக இருக்கிறது. ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட இயக்குநர் பூரி, கதாநாயகன் ராமை ஒரு மாஸ் கேரக்டரில் காட்டவுள்ளார்.

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் மகா சிவராத்திரியான மார்ச் 8, 2024 அன்று வெளியாக இருக்கிறது.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்னாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்னாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
தலைமை நிர்வாக அதிகாரி: விசு ரெட்டி,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர்.

Ustaad Ram Pothineni, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects Pan India Film Double iSmart Launched Grandly

The crazy combination of Ustaad Ram and sensational director Puri Jagannadh is back. The duo reunites for the sequel of their cult blockbuster iSmart Shankar titled Double iSmart. It is going to be double the mass and double the entertainment, this time. Puri Jagannadh and Charmme Kaur together will produce the movie on Puri Connects. Vishu Reddy is the CEO.

Double iSmart had its grand launching ceremony today in the presence of the core team and a few special guests. While Charmme sounded the clapboard, Puri Jagannadh himself directed the first shot on hero Ram Pothineni. “iSmart Shankar alias Double iSmart,” mouthed Ram for the muhurtham shot in style.

The regular shoot of Double iSmart will commence from the 12th of this month.

iSmart Shankar is a very special movie for Ram as well as Puri Jaganndh. The movie turned out to be the biggest blockbuster for both the hero and the director. Thus, the excitement and expectations around this project will be huge.

Puri Jagannadh penned a story that will have a much bigger span and will be made with a high budget on a large scale with top-class technical standards. Puri will be showing Ram in a massier character than iSmart Shankar.

Double iSmart will have a Pan India release. It will release in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages for Maha Shivaratri on March 8, 2024.

Cast: Ram Pothineni

Technical Crew:
Writer, Director: Puri Jagannadh
Producers: Puri Jagannadh, Charmme Kaur
Banner: Puri Connects
CEO: Vishu Reddy
PRO: Vamsi-Shekar

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *