ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- பிரசாந்த் நீலின் பிரபஞ்ச காவிய படைப்பான சலார் 1 : சீஸ் ஃபயர் படத்தின் டீசரை வெளியிட்டது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- பிரசாந்த் நீலின் பிரபஞ்ச காவிய படைப்பான சலார் 1 : சீஸ் ஃபயர் படத்தின் டீசரை வெளியிட்டது.

சலார் 1 : சீஸ் ஃபயர் டீசர்: ஹோம்பாலே ஃபிலிம்ஸின் இந்திய திரைப்படத்தில் பிரபாஸுடன் ஒரு மறக்க இயலாத சாகச பயணத்திற்கு தயாராகுங்கள்..!


ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில்  ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி ஒன்று : சீஸ் ஃபயர் டீசரை வெளியிட்டது: பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோருடன் இணைந்து ஒரு காவிய பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர்  படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை  படக்குழுவினர் தூண்டினர். மேலும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் உருவாக்கிய பரந்த பிரபஞ்சத்தின் பரபரப்பான செயல்பாடுகளின் காட்சிகளை இந்த டீசர் வழங்குகிறது. முன்னணி கதாபாத்திரத்தின் சக்தி வாய்ந்த உரையாடல்களால் நிறைந்திருக்கும் இந்த டீசர்… அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்திய திரைப்படம் என்ற சாதனைகளை முறியடிக்கும் வகையில் உள்ளது. இதுவே வெற்றிக்கான தொடக்கம் என்பதனையும் எடுத்துரைக்கிறது.

மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘கே ஜி எஃப்’ படத்திற்குப். பிறகு அதன் அதிரடி இயக்குநர் பிரசாந்த் நீலிடமிருந்து தயாராகி இருக்கும் மற்றொரு படைப்பு. எதிர்காலத்தில் பல அத்தியாயங்களை வழங்கி.. தனக்கென புதிய பாரம்பரியத்தையும்… புதிய உலகத்தையும் உருவாக்கியுள்ளார். இயக்குநர். முன்னணி நட்சத்திர நடிகர்களுடன்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில், அனுபவம் மிக்க தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டீசரில் கண்ணை கவரும் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. அதே தருணத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படும் முன்னோட்டத்திற்காக மட்டுமே முக்கிய உள்ளடக்கங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இவை யாவும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இருப்பினும் இங்கே கவனிக்க வேண்டிய சுவாரசியமான உண்மை என்னவென்றால், இந்த டீசர் சலார் எனும் பிரபஞ்சத்திலிருந்து சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் என பெயரிடப்பட்ட பகுதி மட்டுமே.

மேலும் சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் என்பது… பிரபல இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் சூப்பர் ஸ்டார் பிரபாஸ் ஆகியோரின் கனவு கூட்டணியை முதன்முறையாக ஒன்றிணைக்கும் இந்திய அளவிலான திரைப்படமாகும். இந்த திரைப்படம்  வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற கே ஜி எஃப் அத்தியாயங்களின் தயாரிப்பாளரான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தயாரிப்பாளரான விஜய் கிரகந்தூரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ‘கே ஜி எஃப்’ படத்தின் இரண்டு அத்தியாயங்களிலும் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினர் இப்படத்திலும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலும், அதனை சுற்றிலும் பிரம்மாண்டமான 14 திறந்த வெளி மற்றும் உள்ளரங்க அரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டு, வெள்ளித்திரையில் இதுவரை பார்த்திராத வகையில் பிரம்மாண்ட காட்சிகளை இந்த படம் வழங்கவிருப்பதாக  உறுதியளிக்கிறது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் எனும் இந்த படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ் சுகுமாறன்., ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் : இதுவரை இந்தியாவில் தயாரான திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படங்களில் ‘சலார் பகுதி 1’ முன்னிலையில் இருக்கிறது. ‘பாகுபலி’ மற்றும் ‘கேஜிஎஃப்’ தொடர் போன்ற புகழ்பெற்ற பிளாக் பஸ்டர்களுக்கு இணையாக இப்படம் உள்ளது. ஈடு இணையற்ற காட்சியை உருவாக்குவதில் தயாரிப்பாளர்கள் எந்த வரையறையும் வைத்துக்கொள்ளவில்லை. குறிப்பாக விஎஃப்எக்ஸ் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளைச் சொல்லலாம். இதற்காக வெளிநாட்டில் உள்ள ஸ்டுடியோக்களின் நிபுணத்துவத்தை பட்டியலிட்டு தேர்ந்தெடுத்து, உயர்தரமான வி எஃப் எக்ஸ் மற்றும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய அதிரடி சண்டை காட்சிகளை வழங்கியுள்ளனர். திறமையான சர்வதேச சண்டை பயிற்சி கலைஞர்களும் பணியாற்றிருக்கிறார்கள்.  

சலார் பகுதி 1 பட டீசரின் வெளியீடு ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. அவர்கள் ‘சலார்’ என்ற பரந்த பிரபஞ்சத்தை ஆராயும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரி ராவ், ஜெகபதிபாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் வெள்ளி திரையில் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதால், ஈடு இணையற்ற சினிமா அனுபவத்திற்கு.. சாகச பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

Hombale Films Unveils Teaser of Prashanth Neel’s Epic Universe – Salaar Part 1 Cease Fire
Salaar Part 1: Cease Fire Teaser:  Prepare for an Unforgettable Thrill Ride with Prabhas in Hombale Films’ Indian Film!
Hombale Films Unveils Teaser for ‘Indian Film’ Salaar Part 1: Cease Fire. Brace Yourself for an Epic Ride with Prabhas & Prashanth Neel
After a long wait, the eagerly anticipated teaser of Prashanth Neel’s directorial ‘Indian Film’ Salaar Part 1: Cease Fire
starring Prabhas has finally been released. The makers had piqued the excitement by announcing the teaser’s arrival at 5:12 AM and as expected, it delivers glimpses of the thrilling action from the expansive universe created by Prashanth Neel, the renowned director. Packed with powerful dialogues from the lead character, the teaser has successfully shown that this high-budget ‘Indian Film’ is set to break records and it’s just the beginning.

Coming from the house of the biggest action director Prashanth Neel who is the name behind the biggest blockbuster KGF, the director has created a new world that could lead to many sequels in the future establishing a legacy of its own. Well-studded with the massive scale and ensemble cast, the makers have only treated us with some eye-capturing glimpses in the teaser, while they have held back all of the major content only for the main theatrical trailer, which will be out soon. However, the interesting fact to note here is that this is just Part 1 named Salaar Part 1: Cease Fire from the Salaar universe.

Moreover, Salaar Part 1: Cease Fire is an upcoming Indian film that brings together the dream team of renowned director Prashanth Neel and superstar Prabhas for the first time. This mega project is produced by Vijay Kiragandur of Hombale Films, the makers of the successful KGF franchise and features the same technical team from the KGF series. The film promises to deliver a grandeur that has never been witnessed before on the big screen, with a staggering 14 massive sets constructed in and around Ramoji Film City.

Hombale Films’ Salaar Part 1: Cease Fire is set to feature a stellar ensemble cast including Prabhas, Prithviraj Sukumaran, Shruti Haasan, and Jagapathi Babu. Directed by Prashanth Neel, the highly anticipated film is scheduled to hit theaters on September 28, 2023, in 5 languages including Telugu, Kannada, Malayalam, Tamil and Hindi.
With a staggering budget of 400 crores (~$50 million), Salaar Part 1: Cease Fire stands tall among the most expensive Indian films ever made, paralleling renowned blockbusters like Baahubali and the KGF series. The makers have left no stone unturned in creating an unparalleled visual spectacle, enlisting the expertise of foreign studios and accomplished stuntmen to deliver high-end VFX and breathtaking action sequences.

The teaser release has ignited a wave of excitement and anticipation among fans, who eagerly await the opportunity to explore the vast universe of Salaar. Brace yourselves for an unparalleled cinematic journey as Prabhas, Prabhas, Prithviraj, Shruthi Haasan, Eshwari Rao, Jagapathi Babu, Sriya Reddy and others breathe life into their characters on the big screen.  Salaar Part 1 Cease Fire Worldwide grand release on September 28th, 2023.
https://youtu.be/bUR_FKt7Iso

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *