நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு மாமன்னனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் புதிய பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். படத்தில் உண்மையான மாமன்னன் என்று சொன்னால் வடிவேலுவை தான் சொல்ல வேண்டும்.அந்தளவிற்கு மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார் “மண்ணாக இருந்த என்னை என் மகன் மாமன்னனாக மாற்றி விட்டான்” என்று சொல்லும் இடத்தில் உணர்ச்சிகரமான நடிப்பால் கவர்கிறார்.
உதயநிதியின் அமைதியான முகமும், ஆக்ரோஷமான உணர்வும் அதை அவர் வெளிப்படுத்திய விதமும் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை காட்டுகிறது. அடிமுறை ஆசானாக மாணவர்களுக்கு வீரக்கலையைச் சொல்லிக் கொடுக்கிறார்.அவர் தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாக செய்துள்ளார்.
கல்லூரி படிப்பு முடித்துவிட்டு ஏழை மாணவர்களுக்காக இலவச பயிற்சி மையம் நடத்துகிறார் கீர்த்தி சுரேஷ். .கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். ஆதிக்கசாதிகளின் பிரதிநிதியாக நடித்திருக்கும் ஃபகத்பாசில் மிரட்டலான நடிப்பை கொடுத்து அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். முதலமைச்சராக நடித்திருக்கும் லால் உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவருமே பொருத்தமாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் அடிதுள்ள நிலையில் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் அனல் காட்சிகளில் தெரிகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முந்தைய படங்களான பரியேரும் பெருமாள், கர்ணன் படங்களில் பேசியது போல இதிலும் சமூக நீதியை பேசியுள்ளார். ஒரு தலைமுறையின் அடிமைத் தனத்தை உடைத் தெறிய வாளை ஆவேசத்துடன் சுழற்றி களமாடியிருக்கிறார்
நடிகர்கள் : உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம் : மாரி செல்வராஜ்