மனநல பாதிக்கப்பட்டவராக நாயகன் எஸ்.ஜே.சூர்யா இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். பொம்மையை உருகி உருகி காதலிப்பதும் பொம்மையை மற்ற ஆண்கள் பார்த்தால் அவர்களை கொலை செய்யயும் அளவிற்கு செல்வது என ஆக்ரோஷ நடிப்பை வழங்கி இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா. கிளைமாக்ஸ் காட்சியில் கைதட்டல்களை பெறுகிறார். முழு படத்தை தன் தோள்களில் தங்கி நிற்கிறார்
பொம்மையாக நடித்திருக்கும் நாயகி பிரியாபவானிசங்கர் நடிப்பு அருமை . அள்ளிக்கொள்ளும் அழகு. முகபாவனைகளில் ஈர்க்கிறார். அந்தவகையில் இதில் பிரியா பவானி ஷங்கர் பொம்மையாகவே வாழ்ந்திருக்கிறார். மற்றோரு நாயகியாக நடித்திருக்கும் சாந்தினிதமிழரசனுக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும் அதை சிறப்பாக செய்திருக்க்கிறார்.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கராஜாவின் இசை என்றாலும் படம் நெடுக இளையராஜாவின் தெய்வீகராகம் பாடல் மீட்டும் கேட்கும் ரகம் மற்ற பாடல்கள் மெலோடியாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
வித்தியாசமான கதையை இயக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். அதேநேரத்தில் எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி ஷங்கர் தொடர்பான கற்பனை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை பார்க்கும் போது இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸில் யாரும் எதிர்பார்க்காததை செய்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்.