இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ படத்தில் ‘ஷைலஜா’ கதாபாத்திரத்தில் நாயகி பாயல் ராஜ்புத் நடிக்கிறார்!

0

இயக்குநர் அஜய் பூபதியின் ‘RX 100’ திரைப்படம் டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படம் ‘செவ்வாய்கிழமை’ எனத் தலைப்பிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

தனது லக்கி சார்ம் நடிகையும் ‘RX 100’ படத்தின் மூலம் புகழ் பெற்றவருமான பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இணைந்துள்ள இயக்குநர் இப்போது தனது புதிய படத்தில் இருந்து ‘ஷைலஜா’ என அவரது கதாபாத்திரத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் கதாநாயகியின் தோரணையும் அவளது கண்களில் கசப்பான உணர்ச்சியும், விரலில் இருக்கும் பட்டாம்பூச்சியும் போஸ்டரை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. இது மிகவும் தைரியமான மற்றும் எமோஷனலான ஒன்றாக உள்ளது.

சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் உடன் இணைந்து தயாரிப்பாளராக, இயக்குநர் அஜய் அறிமுகமாகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.

படத்தின் சுவாரஸ்யமான முதல் பார்வை குறித்து இயக்குநர்- தயாரிப்பாளர் அஜய் பூபதி பேசியதாவது, “’செவ்வாய்கிழமை’ திரைப்படம் 90களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது” என்றார்.

தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் ஆகியோர் பேசுகையில், “‘RX 100’ படத்தின் சிந்து போல, அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ ஷைலஜாவும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும். நாங்கள் 75 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி ஷெட்யூலை அடுத்த மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை அற்புதமாக உள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ‘கந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்”.

தொழில்நுட்பக்குழு விவரம்:
நிர்வாக தயாரிப்பாளர்: சாய்குமார் யாதவில்லி,
கலை இயக்குநர்: ரகு குல்கர்னி,
ஒலி வடிவமைப்பாளர் & ஆடியோகிராபி: ராஜா கிருஷ்ணன்,
ஒளிப்பதிவாளர்: தாசரதி சிவேந்திரா,
இசையமைப்பாளர்: பி அஜனீஷ் லோக்நாத்,
கதை, திரைக்கதை, இயக்கம்: அஜய் பூபதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here