நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளில் ‘டக்கர்’ க்ளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது

0

நடிகர் சித்தார்த்தின் ‘டக்கர்’ திரைப்படம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ’நீரா நீரா’ பாடல் தொடர்ந்து அனைவரின் பிளேலிஸ்ட்டிலும் டிரெண்டாகி வருகிறது. இப்படம் மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்பதை இப்போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் க்ளிம்ப்ஸையும் இன்று (ஏப்ரல் 17, 2023) படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த தலைமுறையை ஈர்க்கும் வகையில் காதல், எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுடனும் இளமை துள்ளலுடனும் பார்வையாளர்களை கவர உள்ளது.

சித்தார்த், யோகிபாபு, திவ்யான்ஷா, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் டக்கரில் நடித்துள்ளனர்

’டக்கர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஏ.கௌதம் (எடிட்டிங்), உதய குமார் கே (கலை இயக்கம்), தினேஷ் காசி (ஸ்டண்ட்ஸ்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here