‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘ப்ராஜெக்ட் கே’ எனும் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது படமாக்கப்பட்ட காணொளியின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

படைப்புத்திறன் மிகு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘ப்ராஜெக்ட் கே’. ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தை தனித்துவமான பாணியில் விளம்பரப்படுத்த திட்டமிட்ட படக் குழுவினர், இதன் ஒரு பகுதியாக ‘ஃபிரம் ஸ்க்ராட்ச்’ எனும் பெயரில் படத்தின் முன் தயாரிப்பு பணிகளின் காணொளியை வெளியிட்டனர்.

இந்த காணொளியின் முதல் பாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பது குறித்த பல விசயங்கள் இடம் பிடித்திருந்தது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனையடுத்து படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் காணொளியின் இரண்டாவது பாகத்தில், ‘அசம்பிளிங் தி ரைடர்ஸ்’ என்ற பெயரில் எதிர் நாயகனுக்குரிய சீருடை பட்டாளம் பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறது. இது இந்தத் திரைப்படத்தின் விலை உயர்ந்த பகுதி என தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் நாக் அஸ்வின் திரைக்கதையில் சிறப்பான கவனத்தை செலுத்தி, உலக தரத்திலான படைப்பாக ‘ப்ராஜெக்ட் கே’ வை உருவாக்கி வருகிறார். தொழில்நுட்ப ரீதியில் இந்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படம் அனைவராலும் பேசப்படும் படைப்பாக இருக்கும்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால்.. பொன்விழா படைப்பாக ‘ப்ராஜெக்ட் கே’ வைத் தயாரித்து வருகிறது.

வைஜெயந்தி மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.
‘பிக் பி’ என செல்லமாக போற்றப்படும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *