கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடக்க இருக்கிறது

0

வெற்றிகரமான KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் (துபாய்), ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ மூலம் பொழுதுபோக்கு துறையில் இறங்குகிறது. தயாரிப்பாளர் திரு.கண்ணன் ரவி கூறும்போது, ​​துபாயில் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் பெரிய ஸ்டார்களின், பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. இப்போது, ​​எனது முதல் தயாரிப்பான ‘இராவண கோட்டம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தி இந்தியன் ஹை ஸ்கூல், ஓத் மேத்தா, ஷேக் ரஷித் ஆடிட்டோரியத்தில் மார்ச் 18 மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

வெற்றிகரமான KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் (துபாய்) இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான நிகழ்வாக நடைபெறுவதை உறுதிசெய்ய எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துள்ளது.

திறமை மிகுந்த இளம் நடிகரான ஷாந்தனு பாக்யராஜ் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் தனது சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். சவால் மிகுந்த வாய்ப்புகளை விரும்பக்கூடிய அவருக்கு ‘இராவண கோட்டம்’ திரைப்படம் நிச்சயம் நல்ல வாய்ப்பாக அமையும்.

கார்த்திக் நேதா எழுதிய யாசின் நிசார் மற்றும் வந்தனா சீனிவாசன் பாடியுள்ள படத்தின் முதல் சிங்கிளான ‘அத்தன பேர் மத்தியில’ அதன் மெல்லிசை ட்யூன் மற்றும் அழகான வரிகளுக்காக இசை ஆர்வலர்களிடமிருந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது. பாடல் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் ‘ஆர்கானிக்’ பார்வைகளைக் கடந்துள்ளது.

ஷாந்தனு பாக்யராஜ், பிரபு, ஆனந்தி, இளவரசு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி இருக்க, கண்ணன் ரவி குழுமத்தின் திரு.கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு

இசை: ஜஸ்டின் பிரபாகரன்,
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்,
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்,
கலை இயக்குநர்: நர்மதா வேணி, ராஜு,
பாடல் வரிகள்: ஏகாதசி, கார்த்திக் நேதா,
ஸ்டண்ட்: ராக் பிரபு,
நடனம்: பாபி ஆண்டனி
ஸ்டில்ஸ்: பாவை ஜி.டி.ரமேஷ்,
விளம்பர வடிவமைப்பு: யுவராஜ் கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here