ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் இணையத்தொடரான ‘எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆகிறது

ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் இணையத்தொடரான ‘எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆகிறது

இந்தி இணையத்தொடரான ‘ஹாஸ்டல் டேஸ்’-ன் தமிழ் வெர்ஷனான ’எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27,2023-ல் ப்ரைம் வீடியோவில் ப்ரீமியர் ஆக இருக்கிறது. ப்ரைம் வீடியோ பார்வையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மதிப்புமிக்க உள்ளடக்கம் சார்ந்த தொடர்கள், படங்கள் மற்றும் இணையத்தொடர்களைப் பல்வேறு ஜானர்களில் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறது. 2023-ல் பல கண்டெண்ட்களை அமேசான் ப்ரைம் அடுத்தடுத்து வைத்திருக்கும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘எங்க ஹாஸ்டல்’ இணையத்தொடர் ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆக இருப்பதை அறிவித்துள்ளது. இது இந்தியில் ப்ளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்த இந்தி இணையத்தொடரான ‘ஹாஸ்டல் டேஸ்’ஸின் தமிழ் வெர்ஷன். நகைச்சுவை ட்ராமாவாக உருவாகி இருக்கும் இந்த இணையத்தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஷ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கெளதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோர் இந்த ஹாஸ்டலின் புது பேட்ச் பொறியாளர்களாக நடித்துள்ளனர்.

கல்லூரி நாட்களின் குறிப்பாக ஹாஸ்டல் நாட்களின் நினைவுகள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாதவையாக அமைந்திருக்கும். ’எங்க ஹாஸ்டல்’ அதுபோன்ற ஒரு மகிழ்ச்சிகரமான பொறியாளர்களையுடைய ஹாஸ்டல் வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

TVF ஒரிஜினல்ஸ்ஸின் தலைவர் ஷ்ரேயான்ஷ் பாண்டே இது குறித்து பேசும்போது, “’எங்க ஹாஸ்டல்’ இணையத் தொடர் தமிழ்நாடு ஹாஸ்டலில் உள்ள மாணவர்களது வாழ்க்கையில் எது போன்ற ஒரு அங்கம் வகிக்கிறது அது எப்படி அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை நகைச்சுவையாக படமாக்கியுள்ளோம். நம் உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் இந்தத் தொடரின் பார்வை, எமோஷன் என எல்லாமே வேறாக இருக்கும். ப்ரைம் வீடியோவுடன் எங்கள் இணையத்தொடரின் தலைப்பை அறிவிப்பதன் மூலம் அனைத்து மொழி பார்வையாளர்களுக்கும் நாங்கள் சிறந்த உள்ளடகத்தைத் தர இருக்கிறோம்”.

இந்த தமிழ் இணையத்தொடர் பார்வையாளர்களது நினைவுகளத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும். இதனை TVF தயாரித்திருக்க சதீஷ் சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் ஜனவரி 27,2023-ல் இருந்து ப்ரைமில் ப்ரீமியர் ஆக இருக்கிறது. சமீபத்தில் ‘எங்க ஹாஸ்டல்’ இணையத்தொடரின் ட்ரைய்லர் வெளியானது. பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆர்வத்தையும் இந்த ட்ரைய்லர் ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *