பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தீபாவளி மலர் – 2022 வெளியிட்ட திரையுலக பிரபலங்கள் !!
68 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மலர் வெளியிடுவது வழக்கம்.
அம்மலர் தமிழ் திரையுலகில் வெகு பிரசித்தமும் கூட !
அந்த வகையில் இந்த 2022ம் ஆண்டின் தீபாவளி பண்டிகையை ஓட்டி வெகு சிறப்பாக தயாராகி வந்த ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தீபாவாளி மலர் – 2022 புத்தகத்தை , பொக்கிஷத்தை ., ஒரு பக்கம் பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட அவரது மகன் இயக்குனர் கலா பிரபு பெற்றுக்கொள்ள., மற்றொரு பக்கம், திரைக்கதை மன்னன் எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் வெளியிட சினிமா பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள ., இன்னுமொரு பக்கம் மனதை வருடம் பாடல்களைத் தொடர்ந்து தந்து வரும் ‘மெலோடி கிங்’ இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட ஒட்டுமொத்த சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் சினிமா பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் D.R.பாலேஷ்வர் (தலைவர்), R.S.கார்த்திகேயன் (செயலாளர்), A.மரிய சேவியர் ஜாஸ்பெல் (பொருளாளர்) மற்றும் துணைத்தலைவர்கள் ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம், ‘கலக்கல் சினிமா’ E.சுகுமார் , இணைச் செயலாளர் ‘சினிமா இன்பாக்ஸ்’ J.சுகுமார் மேலும் , செயற்குழு உறுப்பினர்கள் ‘குறள் டி.வி’ மோகன் , ‘இளஞ்சூரியன்’ A.ஹேமலதா சீனியர் உறுப்பினர் ‘மதிஒளி’ சிவாஜி… உள்ளிட்டோர் பெற்றுக்கொள்ள தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருக்கும் ‘ப்ரின்ஸ்’, ‘சர்தார்’ பட விளம்பரங்களையும், வளரும் நாயகர் இஷானின் வாழ்த்து விளம்பரம் மற்றும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ நிறுவன தீபாவளி வாழ்த்து விளம்பரம் உள்ளிட்டவைகளையும் முன் அட்டை ,பின் அட்டை , உள் அட்டைகளில் தாங்கி வெகு விமரிசையாக வெளிவந்துள்ளது ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் – 2022’
இந்த ‘CPS தீபாவளி மலர் – 2022’ வாயிலாக கிடைத்த விளம்பர வருவாயில் தன் ‘சினிமா பத்திரிகையாளர் சங்க’ உறுப்பினர்களுக்கு இனிப்பும் தீபாவளி பரிசும் வழங்கி வழக்கம் போலவே மகிழ்ந்திருக்கிறது 68- ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கம்.
ஒட்டுமொத்த முன்னணி சினிமா பத்திரிகையாளர்களின் ஒருசேர்ந்த மகிழ்ச்சியும், உழைப்பும் உருசேர்ந்து உருவாகி வெளிவந்துள்ள மலரல்லவா .?! பின்னே , சிறப்பான சினிமா கட்டுரைகள் , பிரபலங்களின் பேட்டிகள்…விளம்பரங்கள் ..பக்கத்திற்கு பக்கம் .இடம்பிடித்துள்ளன…இம்மலரில். அதனால் அம்மலரின் விமரிசைக்கும், பிரசித்தத்திற்கும் … மலரில் ஒவ்வொரு அங்குலத்திலும் சிறப்பிற்கும் சிந்தனைக்கும்… பஞ்சமில்லை… என்பது ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. கூடுதலாய் ஜொலிக்கிறது !