நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்’

நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்’

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, ” கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்” என பாராட்டினார்.

இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பெயரிடப்படாத அந்தப் படத்தின் டீசர் வெளியாகி, கன்னட திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படத்தை பற்றிய புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

கிரீட்டியின் திரையுலகப் பிரவேசம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றதைப் போல், அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. தற்போது படக் குழுவினர், அவரது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 29ஆம் தேதி) படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிட்டு, அதன் டைட்டில் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில்  நடிகர் கிரீட்டியுடன் வி. ரவிச்சந்திரன்,  ஜெனிலியா ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘பாகுபலி’ படப் புகழ் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ரவீந்தர் கவனிக்க, மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன் மேற்கொண்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வாராஹி ‌ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் 15ஆவது திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. நடிகர் க்ரீட்டி கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் தயாராகிறது. தமிழில் வெளியான க்ரீட்டி படத்தின் அறிமுக டீசரில் அவரே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விசயம்.

ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் கன்னட திரை உலகத்திலிருந்து புதுமுக நடிகர் கிரீட்டியின் அறிமுகம் அனைவரையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *