விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடக்கம்
‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத க்ரைம் திரில்லர் படத்தின் படபிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.
கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரோஷிணி பிரகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ்.ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் படத்தின் கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் பட தொகுப்பு பணிகளை கையாள, சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.
தமிழில் தயாராகும் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான க்ரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்தின் படபிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது என்றும், முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.