ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி- ஆஹா ஒரிஜினல்ஸின் ஜீவாவுடன் சர்க்கார்

ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி- ஆஹா ஒரிஜினல்ஸின் ஜீவாவுடன் சர்க்கார்

ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.

உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.

டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்… ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய ‘கேம் ஷோ’ நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.

இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பது தான் சுவாரசியமான பகுதி. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களும், சந்தாதாரர்களும், புதிய வாடிக்கையாளர்களும் ‘சர்க்கார் வித் ஜீவா’வைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

பிரம்மாண்டமான அரங்கம் – பிரபலமான போட்டியாளர்கள் – புதிய தோற்றத்தில் ஜீவா – தமிழர்களுக்கு ஏற்ற வகையிலான நிகழ்ச்சியை பிரத்யேகமாக வழங்கும் ஆஹா டிஜிட்டல் தளம்… என இந்த கூட்டணியின் புதிய நிகழ்ச்சியான ‘சர்க்கார் வித் ஜீவா’  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகர் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று சாதனையை படைத்து வருகிறது. இதற்கு முன் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘மாமனிதன்’, ‘ஜீவி’, ‘ஜீவி 2’ என ஏராளமான திரைப்படங்கள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள்… என பல அசலான … தமிழர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர்  திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *