‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்காக ஒன்றுதிரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்காக ஒன்றுதிரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின்  உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர்.

‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

மும்பை இந்தியா ஆகஸ்ட் 19 2022. உலகளாவிய பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சாகசமும், கற்பனையும் கலந்த காவிய நாடகத் தொடரான ‘ தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ்  ஆஃப் பவர்’ எனும் தொடரின் வெளியீட்டிற்கு முன்னர் பிரைம் வீடியோ, மும்பையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் எனப்படும் பிரத்யேக காட்சியை திரையிட்டது. இந்நிகழ்வில் தொடரி நடித்திருக்கும் நடிகர்களான ரோப் அராமாயோ, மாக்ஸிம் பால்ட்ரி, மார்க்வெல்லா கவென்கா, சார்லஸ் எட்வர்ட்ஸ்,லாயிட் ஓவென்,மேகன் ரிச்சர்ட்ஸ், நஸானின் போனியாடீ, ஈமா ஹோர்வொர்த்,தைரோ முஹாப்ஃதீன், சாரா ஸ்வான்கோபானியந்த் உள்ளிட்ட பலர், தயாரிப்பாளர் ஜே டி பெய்ன் உடன் கலந்து கொண்டனர். இந்த பிரத்யேக பிரீமியர் திரையிடல், திரை உலகினரை கவர்ந்தது. ஏனெனில் நடிகர்கள் மற்றும் பட குழுவினர், சிவப்பு கம்பள வரவேற்புக்கு முன் மும்பை திரையுலக பாணியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து, அரங்கத்தினுள் நுழைந்தனர். இதில் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி, பாணி ஜே, ரசிகா துக்கல், சயானி குப்தா, மான்வி சுக்ரூ, ஜிம் ஸர்ப் என திரை உலகில் பிரபலமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். அரங்கம் நிரம்பி வழிந்த பார்வையாளர்களின் விண்ணை முட்டும் கரவொலியுடன், இந்த தொடரின் தயாரிப்பாளர் ஜேடி பெய்னின் முன்னுரையுடன் பிரீமியர் திரையிடல் தொடங்கியது.

லாஸ் ஏஞ்சல்ஸ், மெக்சிகோ சிட்டி மற்றும் லண்டனில் நடைபெற்ற இந்த தொடருககான பிரத்யேக பிரீமியர்களை தொடர்ந்து உலகளாவிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. அமேசான் ஒரிஜினல் தொடரான ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ செப்டம்பர் இரண்டாம் தேதியன்று இரண்டு அத்தியாயங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.. அன்று முதல் வாரந்தோறும் புதிய அத்தியாயங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

The Lord of the Rings: The Rings of Power Mega Asia Pacific Premiere in Mumbai Sees Record Attendance from Fans and B-town Celebs Alike

The cast and showrunner JD Payne make a striking entry on the carpet in jazzy autorickshaws before walking the premiere carpet with the biggest names from Indian entertainment, including Hrithik Roshan, Tamannaah Bhatia, Kabir Khan, Nikhil Advani amongst many others

The Lord of the Rings: The Rings of Power will premiere on Prime Video on 2nd September 2022, in Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada and English, along with multiple other international languages

MUMBAI, India – 19th August, 2022 – Ahead of the launch of the much-awaited epic drama series, Prime Video hosted a spectacular Asia Pacific premiere in Mumbai for The Lord of The Rings: The Rings of Power. Attended by the series’ cast Rob Aramayo, Maxim Baldry, Markella Kavenagh, Charles Edwards, Lloyd Owen, Megan Richards, Nazanin Boniadi, Ema Horvath, Tyroe Muhafidin, Sara Zwangobaniand and showrunner JD Payne. The premiere reflected the rich, cinematic world of the series, with the cast and crew making a grand entrance on the carpet in true Mumbai-style in a set of vibrant and colourful autorickshaws. Some of the biggest names from the Indian entertainment industry including Hrithik Roshan, Tamannaah Bhatia, Kabir Khan, Nikhil Advani, Bani J, Rasika Duggal, Sayani Gupta, Maanvi Gagroo, Jim Sarbh and many more attended the mega premiere.  The premiere kicked off with an address from showrunner JD Payne, with thunderous applause from audiences in the packed auditorium.

The Asia Pacific premiere of The Lord of the Rings: The Rings of Power in Mumbai was a part of the global tour which includes premieres in Los Angeles, Mexico City and London. The Amazon Original series will premiere 2 episodes on September 2, 2022, on Prime Video, with fresh episodes dropping every week in Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada and English, along with multiple other international languages.
More Stills : https://collect.wetransfer.com/board/soidj082l4c8dx4dd20220819153300

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *