திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் கார்த்தியின் ‘விருமன்’

0

கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் தகவல் வெளியானது.  இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார். 
கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான ‘விருமன்’ வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here