நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது

0

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார்.

உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி களத்தில், மிகப்பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. உலகளாவிய கதைகளுடன், மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையைப் பொறித்துள்ளது. தமிழில் தொடர் பிளாக்பஸ்டர் படைப்புகளைத் தந்து வரும்  டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த “டாணாக்காரன்” படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் “O2”  திரைப்படத்தை,  ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடவுள்ளது.  

தமிழின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா  நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம்  “O2”.  படத்தைக் காண்போரின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.  

இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம், விரைவில் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகவுள்ளது.

பல்வேறு இடைவிடாத பொழுதுபோக்கு  திரைப்படங்கள் மற்றும் பிரீமியம் தொடர்களை உலகளவில் வழங்கி வரும்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் “O2” திரைப்படத்தினை உலகமெங்கும் விரைவில் ஒளிபரப்பவுள்ளது.

Actress Nayanthara starrer ”O2” to have its world premiere on Disney+ Hotstar
Dream Warrior Pictures, one of the well-esteemed production houses of the Tamil film industry is back with its next movie “O2” starring Nayanthara in the lead role. Written and directed by Vignesh GS, the movie is premiering soon on Disney+ Hotstar. 

Disney+ Hotstar is creating benchmarks with back to back blockbusters content like ‘Mookuthi Amman’, ‘November Story’, Hip Hop Aadhi starrer ‘Anbarivu’, recent release Taanakkaran. It will soon be premiering Nayanthara starrer “O2” on its platform and is expected to continue this winning streak.

Actress Nayanthara has reached unparalleled heights with her spontaneous ability to don unique roles that won many hearts. This movie, produced by SR Prakash Babu and SR Prabhu of Dream Warrior Pictures is going to be yet another jewel on her crown. O2, a Thriller Drama, will offer an experience of pulsating adrenaline rush by keeping the audience on the edge of their seat.

The story revolves around a mother along with her 8-yr old son travelling in a bus. In an unexpected turn, when the bus meets with an accident, both the mother and son along with the other passengers face the biggest challenge of survival. Her son, who has a respiratory problem, carries an oxygen cylinder along with him. However, things get awry when a police officer targets the same for his survival. How the mother struggles to save her son from the deplorable situation forms the crux of this story. 

The story of O2 is set across the backdrops of the hilly terrain regions of Tamil Nadu and Kerala. 

While Nayanthara plays the role of the mother named Parvathi, Rithvik essays the character of her son. Leena, RNR Manohar, Aadukalam Murugadoss, Jaffer and other prominent actors are a part of this star-cast.

Written and directed by Vignesh GS, the film features musical score by Vishal Chandrashekar. Tamizh A Azhagan has handled cinematography and Selva RK has taken care of editing. SR Prakash Babu and SR Prabhu of Dream Warrior Picture have produced this movie.

O2 will keep the audiences entertained and feel the pinnacle of thrill with a plethora of edge of the seat moments from beginning till the end. The movie will be premiering on Disney+ Hotstar shortly.
https://youtu.be/q_1rF9DSoUk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here