சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்! பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார்.

0

சந்தானம் கதானாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு இன்று பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது.

இப்படத்தை,
ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை ‘புரொடக்‌ஷன் No10’ ( சந்தானம்15 ) ஆக தயாரிக்கிறார்கள்.

 தமிழ், கன்னடா மொழிகளில் தயாராகும் இப்படத்தை கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.

இதில், சந்தானம் ஜோடியாக,  ‘தாராள பிரபு’ ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதாநாயகனும், நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். தொழில் முறை போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடை பெறும் தொழில் முறை யுத்தத்தை முழு நீள நகைச்சுவை ‘சந்தானம்’ பாணியில் டைரக்டர் உருவாக்குகிறார்.

இதன் படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.  பெங்களூரில் ஆரம்பமானது.  இந்த படபிடிப்பை தொடர்ந்து சென்னை, பாங்காங்க், லண்டன் நகரங்களில் படபிடிப்பு நடைபெறுகிறது.

சந்தானம் படங்களில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.

இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது.

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )
இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya )
ஒளிப்பதிவு: சுதாகர் எஸ்.ராஜ் ( sudhakar S.Raj )
கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere )
ஸ்டண்ட்: ரவி வர்மா ( Ravi Varma )
நடனம்: குலபுஷன், சந்தோஷ் சேகர் ( Kulabhushan, santhosh Shekar )

Pro: ஜான்சன் ( Johnson )

Santhanam’s next film Begins!
Famous kannada director prasanthRaj is directing the film.

The Shooting and pooja of the new film starring Santhanam happened today at bangalore.

NaveenRaj is producing the film under the banner “FORTUNE FILMS”.The unnamed film is produced as ‘PRODUCTION NO10’. ( Santhanam15 )

Famous Director Prasanth Raj is directing the bilingual film in Tamil and Kannada.He directed the hit films in kannada like loveguru,Gaana bajana,Whistle,Orange.

Tanya Hope who acted in film ‘Dharala prabhu’ is roped in as the pair for Santhanam.The film includes other actors like Bhagyaraj,Kovai Sarala,Mansoor ali khan, Manobala,
Mottai Rajendran,Vaiyapuri,Muthukaalai,Ragini Dwivedi,Shakila.

The Hero and Heroine works in different Advertising Companies.They becomes Cat and Mouse due to their work competition.The War between the two is made as a full length Comedy film by the director.

The shooting of the film started with a pooja today at bangalore.The shoot will happen to happen at chennai,bangkok,london.

This Film is being produced as Santhanam’s big budget film.

This is a TradeMark Santhanam Film.The Story is Made in a way that it will be enjoyed by families.

Produced By : Naveen Raj
Music: Arjun Janya
Cinematography: Sudhakar S.Raj
Art: Mohan B.Kere
Stunt: Ravi Varma
Dance: Kukabhushan, Santhosh Shekar
PRO: Johnson

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here