சரண்ராஜ் இயக்கத்தில், தேவ் சரண்ராஜ் அறிமுகமாகும் புதிய படம். Soni Sri Production வழங்கும், “Production No 1“.

0

தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.  
பெயர் சூட்டப்படாத இந்த  புதிய திரைப்படம் “Production No 1” என தயாராகிறது.
Soni Sri Production நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ், நாயாகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பத்திரத்திலும் தனி முத்திரை பதித்து,  தனக்கென மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார்.

பைலட்டாக இருந்து, கோவிட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டு, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் தேவ் சரண்ராஜ்.

ஒரு குப்பத்தில், மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம். இப்படத்தில் இரண்டு காதல் ஜோடிகள் நடிக்கவுள்ளனர். தேவ் சரண்ராஜ், சுஷ்மிதா சுரேஷ் முதன்மை ஜோடியாக நடிக்க, ஆதி தேவ் மற்றும் பிரியதர்ஷினி அருணாசலம் இன்னொரு ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை  ஜனார்தன் செய்கிறார். இணை இயக்கம்,  பாடல்களை  K.சுரேஷ் குமார் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பாலவாக்கத்தில்  பூஜையுடன்,  படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே துவங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கம் பகுதியில் தொடர்ந்து 45 நாட்கள் ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை, ஏலகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளிலும்  படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம்  விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
Soni sri productions “PRODUCTION:1”

Dev Charanraj (hero)
Adhi Dev (2 nd hero)
Sushmithaa (heroine)
Priyadharshini Arunachalam (2nd heroine)

Technician:
Story, screen play, dialogue & direction :
N.Y.Charanraj
Camera : Janarthan
Editor : S P.Ashamed
Stunt : Kanal kannan
Dance : Dayana
Production exquitive : Thangaraj
Lyrics & Co.director
K.sureshkumar
PRO : Johnson

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here