ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

0

நடிகரும் இயக்குனருமான ராகவா  லாரன்ஸ் தனது  தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாகஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்..  

நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின்  பிறந்தநாள்  ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான  பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது.  அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம்  நாங்கள் பல நாட்கள்  காத்திருந்து  தற்போது தான்  ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன்  இந்த படத்தை  தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.
தற்போது நிலவிவரும் கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அனைவரும் தங்களின்  நல்லாசியையும், ஆதாரவையும்  எனது தம்பிக்கு அளிக்குமாறு  வேண்டுகிறேன்.  
          நன்றி.

     அன்புடன்
ராகவா லாரன்ஸ் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here