கருத்துக்களால் கவர்ந்திழுத்த “கல்தா”!

கருத்துக்களால் கவர்ந்திழுத்த “கல்தா”!

புதுமுகங்கள் நடிப்பில் இவ்வாரம் வெளியாகவுள்ள “கல்தா” திரைப்படம் அழுத்தமான கருத்துகளை, சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் பின்புலத்தை அலசியதில் திரை ஆர்வலர்களை, விமர்சகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இத்திரைப்படம் தென் தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில்,அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், மக்கள் படும் துயரத்தை, அவலத்தை அழுத்தமாக பேசுகிறது. சமூகத்திற்கு அவசியமான கருத்தை எடுத்து கையாண்டதில் இயக்குநர் ஹரி உத்ரா திரை ஆர்வலர்களால் பாராட்டு பெற்று வருகிறார்.

இயக்குநர் ஹரி உத்ரா கூறுகையில்

படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்றாலும் சிறப்பான நடிப்பை தந்து கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். குறிப்பாக அறிமுக நாயகன் சிவா நிஷாந்த் இப்படத்திற்காக பாக்ஸிங், சிலம்பம், சைக்கிளிங், நடனம், நடிப்பு என அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டு ஒரு புதுமுகம் என்கிற உணர்வே வராமல் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். “கல்தா” ரிலீஸாகும் முன்னரே அவர் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது எனக்கு பெரு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. நாயகி ஐரா படத்திற்கு மற்றுமொரு பலமாக இருந்தார். வேலையில் அவரது அர்ப்பணிப்பு அனைவரையும் ஈர்த்தது. அவரது நடனத்திறமை குறிப்பாக குச்சிப்புடி, பரதநாட்டியம் போன்றவற்றில் அவர் சிறந்து விளங்கியதால், அவரால் எளிதாக முகபாவங்களை, நடிப்பை கையாள முடிந்தது. இருவருமே பெரிய உயரங்களுக்கு செல்லக்கூடியவர்கள். இவர்கள் இருவரை போலவே படத்தில் நடித்திருக்கும் மற்ற கலைஞர்களும் கண்டிப்பாக மக்களால் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்படுவார்கள்.

“கல்தா” இயக்குநர் ஹரி உத்ராவின் மூன்றாவது படைப்பாகும். விம்ரசகர்களால் கொண்டாடப்பட்ட “தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும்” படங்களை இயக்குநர் ஹரி உத்ரா இதற்குமுன் இயக்கியிருந்தது குறிப்பிடதக்கது.

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்க்கொடி, ரகுபதி மற்றும் செ.ஹரி உத்ரா, இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகன் சிவா நிஷாந்த், மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆண்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், SMT கருணாநிதி, காக்கா முட்டை சசி, சுரேஷ், முத்து வீரா, பழைய ஜோக் தங்க துரை, ராஜ சிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – S.ஹரி உத்ரா

ஒளிப்பதிவு – B.வா

படத்தொகுப்பு – முத்து முனியசாமி

இசை – ஜெய் கிரிஷ்

பாடல்கள் – வைரமுத்து, வித்யா சாகர்

கலை இயக்கம் – இன்பா ஆர்ட் பிரகாஷ்

சண்டை – கோட்டி

நடனம் – சுரேஷ் S

ஸ்டில்ஸ் – பா. லக்‌ஷ்மண்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one

வரைகலை – பிளசைன்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *