Vijay Sethupathi’s cameo in Ashok Selvan-Ritika Singh’s Oh My Kadavule
Everything involving Ashok Selvan-Ritika Singh starrer ‘Oh My Kadavule’ has been sending attractive waves across the places. Especially, with the star-cast loaded with actors including Vani Bhojan and Sara, who are considered as people’s favourite, here is Makkal Selvan Vijay Sethupathi joining the league for a cameo appearance in this movie.
Director Ashwath Marimuthu says, “More than labeling it as a cameo, I would instead claim it as a very important character. In fact, his moments occur as a prominent point, where the story travels to the next level. Soon after completing the script and finalizing the artistes, we were looking out for someone, who is popular and at the same time can add realistic values to this role. Finally, with the reference of Ashok Selvan, I was able to narrate the story and character to Vijay Sethupathi sir and he instantly gave a nod. Although, the screen time of this role will be lesser, I am sure audiences will be more attached to it. We as a team feel more lucky enough to have his presence in our movie.”
Oh My Kadavule is a Rom-Com shot elegantly stylish with ultra-urban shades and the first look posters have already amazed the crowds. The team has now wrapped up shooting the entire film and post-production work is happening on full swing.
Produced by G. Dilli Babu for Axess Film Factory in association with Ashok Selvan-Abhinaya Selvam’s Happy High Pictures, the official word on the film’s audio and worldwide theatrical release will be made shortly.
The film has musical score by Leon James and cinematography by Vidhu Ayyanna, who earlier won the praises for his visuals in Meyaadha Maan and LKG.
“ஒ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி.
பெயர் அறிவிக்கப்பட்டதலிருந்தே எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படைப்பாக இருக்கிறது “ஓ மை கடவுளே” படம். அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் இந்தத் திரைப்படம் இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர் பட்டாளத்தால் மேலும் மேலும் எதிர்பார்ப்பை குவித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா இணைந்திருக்கும் இப்படத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். ஒரு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இது பற்றி கூறியதாவது…
சிறப்புத் தோற்றம் என்பதை விட என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாப்பாத்திரம் என்பேன். அவர் படத்தி வரும் நேரம் படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக இருக்கும்.
திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிகர்களின் தேர்வுகள் முடிந்த பிறகு இந்தப்பாத்திரத்தில் நடிப்பதுக்கு ஏற்ற ஒருவரை தேடினோம். மிகப்பிரபலமாக இருக்கும் அதே நேரம், கேரக்டரில் எளிமையை நிஜத்தை பிரதிபலிக்க வேண்டும். இறுதியாக அசோக் செல்வன் மூலம் விஜய் சேதுபதியிடம் கதையை, கேரக்டரை பற்றி விவரித்தேன் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டு வாழ்த்தினார். இந்தக் கேரக்டர் படத்தில் வருவது சிறிது நேரமாக இருக்கலாம் ஆனால் ரசிகர்கள் மனதில் மிக நெருக்கமாக உணரக்கூடியதாக இருக்கும். சினிமாவில் பெரு வெற்றிகள் மூலம் தமிழக மக்களின் அன்பை அள்ளியிருக்கும் விஜய் சேதுபதி எங்கள் படத்தில் இணைந்ததில் மொத்த படக்குழுவுக்கும் மகிழச்சி. அவருக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
“ஓ மை கடவுளே” இன்றைய நகர்புற மேல்தர வர்க்கத்து காதலை இயல்பாக சொல்லும் காதல், காமெடிப்படமாக இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் இசை மற்றும் பட வெளியீடு தேதிகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
லியான் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேயாத மான், எல் கே ஜி படப்புகழ் விது அயன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
Cast and Crew
Producers : G. Dilli Babu , Abhinaya Selvam
Production Company : Axess Film Factory , Happy High Pictures ,
Starring : Ashok Selvan , Rithika Singh, Vani Bhojan, Sara.
Directed By : Ashwath Marimuthu
Music Director : Leon James
Cinematography : Vidhu Ayyanna (Meyaadha Maan and LKG fame)