தமிழ் மொழிக்கென்ற இருக்கும் தனிப்பெருமைகளுள் ஒன்று “ழ” எனும் எழுத்து. உச்சரிப்பிலும் காட்சியிலும் அர்த்தத்திலும் பெருமை மிகு “ழ” எனும் இந்த எழுத்தை அடிப்படையாக வைத்து தமிழ் பெருமை சொல்வது   “ழ” பாடல். தமிழின் பெருமை சொல்லும் இந்த “ழ” பாடலில் தமிழ் மக்களின் கலாச்சாரம், வரலாறு, அவர்களது செல்லப்பிராணிகள், உடைகள், உணவுகள், உறைவிடங்கள், வாழ்வியல் என அவர்களின் அனைத்து அடையாளங்களோடு   தமிழர்களின் மாறாத அன்பும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்பாடல் தமிழகத்தின் கலாச்சாரா அடையாளமான கன்னியாகுமரி,நெமிலி கிராமம், இராமேஸ்வரம், அப்துல் கலாம்  நினைவிடம், செம்மொழிப்பூங்கா,மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெருமையயும், தமிழ் மக்களின் அன்பையும் இப்பாடல் வழி சொன்ன பெருமை இப்பாடலை உருவாக்கிய தொழில்நுட்ப கலைகஞர்களையே சாரும். இப்பாடலின் ஆத்மாவிற்கு இசையால் உயிர் தந்திருக்கிறார்  இசையமைப்பாளர் A R ரெஹெனா. தன் எழுத்தால் இப்பாடலுக்கு வரிகள் தந்திருக்கிறார் பாடலாசிரியர் நீலகண்டன். இப்பாடலை இயக்கியுள்ளார் A R ரெஹெனா வின் மச்சி மற்றும் ஒரு ஊர்ல படங்களின் இயக்குநர் வசந்த குமார். எதிர்பராத விதமாக அவர் நம்மை விட்டு பிரிந்திருந்தாலும் அவரது இறுதி உழைப்பான இப்பாடல் அவர் பெயரை காலம் கடந்தும் என்றென்றும் சொல்லும்.  தமிழர் வரலாறு சொல்லும் இப்பாடலுக்கு காலத்தின் அடையாளங்களை அனைத்தையும் திரட்டி எடிட்டிங் செய்துள்ளார் R S  கணேஷ் குமார். ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரஜி வெங்கட் மற்றும் அன்வர் K .கலை இயக்கம் செய்துள்ளார் P S K  சேது. தங்கள் குரல்கள் மூலம் வடிவம் தந்திருக்கிறார்கள் A R ரெஹெனா, டாக்டர் நாரயணன், ஜோதி, மற்றும் ஆத்ரேயா. முழு வடிவமாக ஒரு அற்புதமான பாடலாக உருவாகியிருக்கும் இப்படலுக்கு சிறப்பு நன்றிக்குரியவர்கள் A R ரெஹெனா, திருவையாறு பெரமூர் நாராயணன் மற்றும் டான்ஸர் வினோத். பலரது உழைப்பின் பெருமையாக  இன்று வெளியாகிறது “ழ” பாடல்.

இப்பாடலின் எண்ணத்தால்  முதலில் வடிவமைத்தவர்கள் திரு பெருமாள் அண்ணாமலை, மற்றும் திரு நீலகண்டம் ஆகிய  அமெரிக்க தமிழ் சங்கத்தை சேர்ந்த இந்த இருவருமே ஆகும். ஹார்வார்ட் தமிழ் இருக்கை மற்றும் ஹூஸ்டன் தமிழ் இருக்கை சார்பில் இவர்கள் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார்கள்.
தமிழின் பெருமை சொல்லும் “ழ” பாடல் இதனை உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள், பாடாலசிரியர் , இசையமைப்பாளர் பெயர் சொல்வதோடு தமிழரின் அடையாளத்தையும் பெருமையையும் காலத்திற்கும் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.

Music Video Link :
https://youtu.be/NcfNGxbw_xk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here