உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’ | அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்குகிறார்
உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், பல்வேறு காரணங்களால் வெகுவேகமாக அழிந்து வரும் கலையான கட்டைக்கூத்தை மையமாக கொண்டது.
ஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமானத் திரைப்படம்.
இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் கவிஞர் சினேகன், அதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நடித்திருக்கும் நாட்டியா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
மேலும் கே பாக்யராஜ் ,ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், முத்துக்காளை, சந்தான பாரதி, போண்டாமணி, இ.ராமதாஸ், டிபி கஜேந்திரன், ‘தாரை தப்பட்டை’ ஆனந்தி, கனிகா மற்றும் பலர் உள்ளிட்ட பல சிறப்பான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் சுதர்சன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.
தாஜ்நூர் இசையமைக்க, கவிஞர் சினேகன் பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
கலை இயக்குனர் மார்டின் டைட்டஸ் காட்சிகளுக்கு அழகு சேர்க்க, விஜய் ஜாக்குவார் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்.
அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்கத்தில், கவிஞர் சினேகன் தயாரித்து-நடித்திருக்கும் ‘பொம்மிவீரன்’, வெகுவிரைவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
சினேகன்
நாட்டியா
ஆனந்தி
கனிகா
தாரிணி
ஐகியா
பாக்கியஸ்ரீ
கே பாக்யராஜ்
ஊர்வசி
சிங்கம்புலி
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
சந்தான பாரதி
டி பி ராஜேந்திரன்
இ. ராமதாஸ்
முத்துகாளை
போண்டாமணி மற்றும் பலர்
தயாரிப்பு: உழவர் திரைக்களம்’ கவிஞர் சினேகன்
இயக்கம்: ரமேஷ் மகாராஜன்
ஒளிப்பதிவு: சாலை சகாதேவன்
இசை: தாஜ்நூர்
படத்தொகுப்பு: ராம் சுதர்சன்
சண்டைப்பயிற்சி: விஜய் ஜாக்குவார்
கலை: மார்டின் டைட்டஸ்
பாடல்கள்: கவிஞர் சினேகன்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்