Kanni Maadam wraps up shooting
A filmmaker isn’t ennobled as ‘Captain of the Ship’ for the traits of expertise on screenwriting and directorial skills, but for the efficient planning. When a project is well planned at pre-production phase, it will definitely have a greater positive impact during the shooting phase, especially over wrapping it up on time. Actor turned filmmaker Bose Venkat has pushed the bars with his maiden attempt through ‘Kanni Maadam’, which has wrapped up the shooting now.
With the delighted spirit, director Bose Venkat says, “We started shooting for this film on February 18th and have completed it by May 16th that includes 35 days schedule with full unit and 7 days with camera crew. If not for the complete support of producer Hasheer, this would have not been possible. He never intervened into the creative process and extended his affinity towards project from beginning till end. We as a team are blessed to have a producer like him. In fact, we were delighted to see him so much happy on the wrap-up day as he hugged each and every crew out of love. These days, it’s not easy to see such emotional moments from a producer.”
Adding upon the specialty of ‘Kanni Maadam’, Bose Venkat says, “Kanni Maadam will define “What is called MADRAS?” We wanted to capture the most celebrated landmark places of the city giving complete details about it. It’s common that youngsters and others who come to Chennai with aspirations and dreams reside in areas like Mettu Kuppam, Vijayaraghava Puram and Choolaimedu. So we have shot the entire film across these places for the ‘nativity’ factors.”
All the songs composed by music director Hari Sai will be montages. It’s noteworthy that the film was recently under spotlights for having Robo Shankar crooning a song based on auto rickshaw drivers. Antony Dasan has a crooned a song and few more prominent icons will be rendering rest of the songs that includes names like Shreya Ghoshal or Chinmayi.
Hasheer is producing this film for Rooby Films featuring Sriram and Gayathri in lead roles. Aadukalam Murugadoss, Gajaraj, Valeena Prince, Vishnu Ramasamy and Super Good Subramani are playing important roles. Harris J Iniyan has handled cinematography with Rishal Jaini as editor and Siva Shankar as art director Viveka penning lyrics and Dinesh Subbarayan choreographing stings. The post-production work of Kanni Maadam is happening on full swing and the official announcement on the first look, trailer, audio and worldwide release will be made shortly.
கன்னி மாடம்
ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் “கேப்டன் ஆஃப் தி ஷிப்” என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம் முன் தயாரிப்பு கட்டத்தில் நன்றாக திட்டமிடப்பட்டிருக்கும் போது, அது படப்பிடிப்பு நேரத்தின்போது நிச்சயம் அதிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக குறித்த நேரத்தில் முடிக்க முடியும். “கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது முயற்சியால் குறித்த நேரத்தில் படத்தை முடித்திருக்கிறார்.
இயக்குனர் போஸ் வெங்கட் இது குறித்து கூறும்போது, “பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, மே 16ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்துக்கு ஆதரவாக இருந்தார். எங்கள் குழுவுக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது ஆசீர்வாதம். உண்மையில், கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் அனைவரையும் கட்டிப்பிடித்து தன் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்த காலத்தில், இது போன்ற உணர்ச்சிகரமான தருணங்களை ஒரு தயாரிப்பாளரிடம் பார்ப்பது எளிதல்ல” என்றார்.
‘கன்னி மாடம்’ படத்தின் சிறப்பம்சத்தை பற்றி போஸ் வெங்கட் கூறும்போது, “கன்னி மாடம் படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும்?. நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாள இடங்களை படம் பிடித்து, அவை பற்றிய முழு விவரங்களையும் அளிக்க நினைத்தோம். சென்னைக்கு சாதிக்க நினைக்கும் கனவுகளோடு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுகுப்பம், விஜயராகவபுரம் மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளில் தங்குவது ஒரு பொதுவான விஷயம். எனவே, ‘நேட்டிவிட்டி’ காரணிகளுக்காக இந்த இடங்களில் முழு படத்தையும் படம் பிடித்திருக்கிறோம்” என்றார்.
இசையமைப்பாளர் ஹரி சாய் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ‘மோண்டாஜ்’ முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் பற்றிய ஒரு பாடலை ரோபோ ஷங்கர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தோணி தாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். ஸ்ரேயா கோஷல் அல்லது சின்மயி உட்பட பல பிரபலங்களும் மீதம் உள்ள பாடல்களை பாட இருக்கிறார்கள்.
ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம் மற்றும் காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜே இனியன் ஒளிப்பதிவு செய்த இந்த படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய மற்றும் சிவ சங்கர் கலை இயக்குனராக பணி புரிந்துள்ளார். விவேகா பாடல்களை எழுத, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். கன்னி மாடம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர், ஆடியோ மற்றும் உலகளாவிய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.