டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’
‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’
காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள், அட்டகத்தி, சூடு கவ்வும், பிட்சா ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் ‘ரெட்ரம்’.
வியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும் விதத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்கள் மக்கள் மற்றும் திரையுலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
கதாநாயகன்: அசோக் செல்வன்
கதாநாயகி: சம்யுக்தா ஹோர்நாட்
மற்றும் தீபக் பரமேஷ், மதுமதி, ஜான் மகேந்திரன், செய்யது மைதீன், சரத் ரவி, நிஷாந்த் மோகன்தாஸ், எபனேசர், கிரிஷ் மது, பிரவின், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர்.
தயாரிப்பு: சுந்தர் அண்ணாமலை
எழுத்தும் இயக்கமும்: விக்ரம் ஸ்ரீதரன்
ஒளிப்பதிவு: குகன் எஸ் பழனி
இசை: விஷால் சந்திரசேகர்
பாடல்கள்: நவீன் பி
நிர்வாக தயாரிப்பாளர்: சதீஷ் குமார் கே
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்