AR Rahman Creates India’s Marvel Anthem for the release of Avengers Endgame
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும்.
நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதுவே இந்த படத்தை ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரசிகர்கள் மார்வெல் சூப்பர் ஹீரோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மிகப்பெரிய வெற்றியே இதை பறைசாற்றுகிறது. தானோஸ் கிரகத்திலிருக்கும் மக்கள் தொகையை பாதியாக்கி விட்டதால், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பற்றிய உரையாடல்கள் ஈடு இணையற்றதாக உள்ளது.
“என் சொந்த குடும்பத்திலேயே என்னை சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
“அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் ஒரு படம் மட்டும் அல்ல, இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ரசிகர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான ஒரு பயணம். ரசிகர்கள் மிகவும் விரும்பும் மார்வெல்லை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கொண்டாடுவது தான் சரியான வழி. ரசிகர்களின் அசாதாரண ஆதரவுக்கு நாங்கள் சிறிய அளவில் தெரிவிக்கும் நன்றி” என்றார் மார்வெல் இந்தியா ஹெட் பிக்ரம் துக்கல்.
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பற்றி: தானோஸ் மூலம் நிகழ்வுகள் பாதி பிரபஞ்சமே அழிந்து விட, சூப்பர் ஹீரோக்கள் பலரும் மறைந்து விட, மீதமுள்ள அவெஞ்சர்ஸ் எடுக்கும் இறுதி முடிவு தான் இந்த 22 படங்களின் இறுதி படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.
கெவின் ஃபைஜ் தயாரிக்க, அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ இரட்டை இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். லூயிஸ் டி’எஸ்ஸ்பிஸிடோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, டிரின் டிரான், ஜான் ஃபேவ்ரூ மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாக தயாரிப்பில் பணிபுரிந்துள்ளனர். கிறிஸ்டோபர் மார்கஸ் & ஸ்டீபன் மெக்ஃபீலி திரைக்கதை எழுதியுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
Marvel India has teamed up with India’s musical maestro – A.R. Rahman to bring in his signature stamp of genius for Avengers: Endgame. The Oscar winner will be creating an all-new anthem for Indian fans of Marvel across three languages – Hindi, Tamil and Telugu. The track will be released on April 1st.
Fans from across the country are eagerly waiting for the grand conclusion, Avengers: Endgame, making it one of the most anticipated movie of the year. Over the last few years, Indian fans have loved and embraced the Marvel Super Heroes; and the success of Avengers: Infinity War is a reflection of the popularity that it enjoys today. With Thanos snapping away half the population from the planet; the conversations around Avengers: Endgame have been unparalleled.
“Being surrounded by Marvel fans in my own family, there was too much pressure to come with something really satisfying and apt for Avengers: Endgame. I hope Marvel aficionados and music lovers enjoy the track,” said A.R. Rahman.
“Avengers: Endgame is not just a movie, it’s an emotional journey for fans everywhere in India. An original composition by Oscar winner A.R. Rahman was the perfect way to celebrate the love for Marvel among fans in the country. This is our small way of thanking the fans here for their extraordinary support”, said Bikram Duggal, Head – Studios, Marvel India.
About Avengers: Endgame
The grave course of events set in motion by Thanos that wiped out half the universe and fractured the Avengers ranks compels the remaining Avengers to take one final stand in Marvel Studios’ grand conclusion to twenty-two films, “Avengers: Endgame.”
Kevin Feige produces “Avengers: Endgame,” and Anthony and Joe Russo are the directors. Louis D’Esposito, Victoria Alonso, Michael Grillo, Trinh Tran, Jon Favreau and Stan Lee are the executive producers, and Christopher Markus & Stephen McFeely wrote the screenplay. The movie releases on 26th April in English, Hindi, Tamil and Telugu.
.