சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து புகழ் பெறும் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அவர்களின் வெற்றி சின்னத்திரையில் இருந்து சாதிக்கும் கனவோடு வருபவர்களுக்கு பெரும் உத்வேகத்தை தருகிறது. அந்த வகையில் சமீபத்திய வரவு ‘தீனா’. ஹரிஷ்ராம் இயக்கத்தில் ‘கனா’ புகழ் தர்ஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோருடன் இணைந்து ‘தும்பா’ படத்தில் நடித்திருக்கிறார் தீனா.

“இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. பயிற்சி பட்டறைக்கு போய் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்கள் நடிப்பு திறமையைப் பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. ஒன்லைன் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்களின் தலைமுறையில் வளர்ந்தவன் நான், இந்த படத்தில் எனக்கு அப்படிப்பட்ட விஷயங்கள் நிறைய உள்ளன. என் கதாபாத்திரத்தின் தன்மை எனக்கு நடிக்க ஒரு பெரிய வாய்ப்பை கொடுக்கும் என நான் நம்புகிறேன். ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்” என்றார் தீனா.

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP பேனரில் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேகா நியாபதி. இந்த படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் பெற்றுள்ளார். அனிருத், விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இந்த ஃபேண்டஸி அட்வென்சர் படத்துக்கு இசையமைத்துள்ளனர். நரேன் இளன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர் கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here