Sindhubaadh Movie Stills

Sindhubaadh Movie Stills

இயக்குனர்  S.U.அருண்குமார்  பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு பிறகு வேறுபட்ட  கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான சிந்துபாத்தில் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தை தொட்டுள்ளார். சிந்துபாத் ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

பாகுபலி 2 திரைப்படத்தை வெளியிட்ட மற்றும் ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தை தயாரித்த K புரொடக்சன்ஸ்  S.N. ராஜராஜன் அவர்களும் சேதுபதி திரைப்படத்தை தயாரித்த வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் அவர்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில்  விஜய் சேதுபதிக்கு  ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். நீண்ட  நாட்களுக்கு பிறகு வலிமையான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சலியின் நடிப்பு இத்திரைப்படத்தில் பெரிதாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலிக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல்காட்சிகள் மிக சுவாரசஸ்யமாக அமைந்துள்ளது.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரும்  மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் சூர்யா விஜய் சேதுபதியும் தென்காசியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படம் சூர்யா விஜய் சேதுபதிக்கு   சிறந்த அடைளமாக அமையும்.

சேதுபதி திரைப்படத்தில் SI-ஆக நடித்த லிங்கா இப்படத்தில் தாய்லாந்தை சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார். இதற்காக அவர் 18 கிலோ உடல் எடையை கூட்டி முரட்டுத்தனமான  தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வில்லன் கதாப்பாத்திற்காக தாய்லாந்து மொழி பேசவும், உடல் எடை கூட்டவும் ஒருவருடம் கடுமையாக உழைத்துள்ளார். அவரைப்போலவே  சேதுபதியில் நடித்த விவேக் பிரசன்னா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் S.U.அருண் குமாரின் திரைப்படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். இந்தப்படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன்  இணைவது   ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெரும் ஐந்து பாடல்களும் ஐந்து விதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின்  மிகப்பெரிய ஹிட் ஆல்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின்  பின்னணி இசையினை உலகத்தரத்தில் யுவன் ஷங்கர் ராஜா கொடுத்துள்ளார்.

    சிந்துபாத் திரைப்படம் தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றிய Nung aka Pradit seeluem தாய்லாந்தில் நடக்கும் கதைப்பகுதிக்கு சண்டை பயிற்சி அமைத்துள்ளார். சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாகவும் அதே சமயத்தில் எதார்த்த்தை மீறாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தின்  Post Production வேலைகள் 80 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், படத்தில் நடித்தவர்களை டப்பிங் பேச வைப்பதன் மூலம்தான் எதார்த்தத்தையும் உண்மைத் தன்மையையும் நெருங்க முடியும் என்பதால் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிக்கு இயக்குனர் தாய்லாந்து மற்றும் மலேசியா  செல்கிறார்.

    கதையின் முக்கியமான நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார். பட ரிலீசுக்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் கூட்டணி ரசனையான பேசுபொருளாக மாறும். மேலும் மலேசியாவை சேர்ந்த நடிகர்கள் கணேசன் மற்றும் சுபத்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் இந்த நிலையில் எடிட்டர் ரூபனின் பணி பேசப்பட்டு வருகிறது. அவர் புதிய கண்ணோட்டத்தில் இக்கதையை எடிட் செய்துள்ளார்.

    இறவாக்காலம் திரைப்படத்திற்கு  பிறகு விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், இவர் AR Rahman-ன் இசை ஆல்பங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆவார். மேலும் பல விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை பொறுத்தவரையில்   தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து என வெவ்வேறு கலாச்சார பின்னணியைக் கொண்ட பகுதியை பதிவு செய்வதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வழக்கமான தமிழ்படங்களைப் போல வெளிநாடுகளை காட்சிப்படுத்தாமல் தாய்லாந்து மற்றும் மலேசியா மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு எளிய மனிதன் ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகியுள்ளது சிந்துபாத்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *