திகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில் வல்லவரும், அதற்காகவே பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றவருமான இயக்குனர் சுனில் குமார் தேசாய், இப்போதும் ஒரு பன்மொழி திகில் திரைப்படத்துடன் உங்களை சந்திக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இத்திரைப்ப்படம் உலகெங்கிலும் திரையிடப்பட இருக்கிறது.

தமிழில் “உச்சகட்டம்” என்றும், “உத்கர்ஷா” என மற்ற மூன்று மொழிகளிலும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், வருகின்ற மார்ச் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஆர் தேவராஜ் ‘தி கிரியேஷன்ஸ்’ சார்பாக இத்திரைப்படத்தை தயாரிக்க, ஏஜிஎஸ் சினிமாஸ் உலகெங்கும் இதனை வெளியிட இருக்கிறது.

திகில் கதைகள் படைப்பதில் அப்பழுக்கற்ற திறமை கொண்ட சுனில் குமார் தேசாய், இம்முறையும் ஒரு மிகச் சிறந்த சுவராஸ்யமிக்க திரைபடத்தை திகில், மர்மம், எதிர்பாரா திருப்புமுனைகள், குறிப்பிடத்தக்க அதிரடி காட்சிகள் என படம் முழுவதும் தனது காட்சி அமைப்பில் முத்திரையை பதித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெகுவான வரவேற்ப்பை பெற்றிருக்கும் நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. 

ஒரு புத்தாண்டு தினத்தின் முந்தைய 48 மணி நேரத்தில் நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளின் தாக்கத்தை முன்னிருத்தி இத்திரைப்படத்தின் கதைக்கரு அமைந்துள்ளது. ஒரு உல்லாச விடுதியில் நடக்கின்ற ஒரு கொலை, அது ஏற்படுத்துகின்ற பெருங்குழப்பங்கள், என இவற்றால் கதையின் முக்கிய கதாப்பத்திரங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலை என கதை பயணிக்கிறது. கதாபாத்திரங்கள் முன்னிலை பெரும் மர்மங்கள் நிறைந்த இத்திரைப்படத்தில், கொலை, துரோகம், காதல், காமம், மர்மம், அதிரடி சண்டை காட்சிகள் என முற்றிலுமாக சிலிர்ப்பூட்டும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மாறுகின்ற விறுவிறுப்பான காட்சிகள், பித்துப்பிடித்த கதாபாத்திரங்கள், கொலைக்கு பின் மறைக்கப்படும் நிகழ்வுகளும் அதன் நோக்கங்களும் என கதையும், வசனங்களும் கதையின் போக்கை இறுதி நிமிடம் வரையில் விறுவிறுப்பாக வைத்திருக்கிறது.

‘சிங்கம் 3’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இத்திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். தாகூர் ஒரு உடற்பயிற்சி விரும்பி, ஒரு ஆணழகன், உடல்நலம் மீது தீராத அக்கரை கொண்டவர். இதற்காகவே பலர் சர்வதேச விருதுகள் பெற்றவர் என்றாலும், ஒரு திறமையான நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி வருகிறார். அவருக்கு இணையாக சாய் தன்ஷிகா, ‘தடம்’ தன்யா ஹோப் என இருவர் கதைக் களத்தில் உள்ளனர்.

‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் இத்திரபடத்தில் வில்லனாக வருகிறார். ‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு  சஞ்ஜோய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார். பழம்பெரும் இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியின் மகனான இவர் 1998ம் ஆண்டு ‘என்னு சொந்தம் ஜானகிகுட்டி’ எனும் மலையாளப் படத்தில் அறிமுகமாகி, ‘சர் ஃபரோஷ்’ எனும்  ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இயக்குனரை பற்றி:

கன்னட திரையுலகுக்கு பெருமை சேர்த்த முன்னணி இயக்குனர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து கொண்டவர் சுனில் குமார் தேசாய். குறிப்பிடத்தக்க வகையில் நான்கு முறை கர்நாடக அரசின் திரைப்பட விருதுகளை பெற்ற ஒரு அசலான இயக்குனர். அவரது முதல் திரைப்படமான ‘தர்கா’ அவருக்கு கன்னட அரசின் ‘சிறந்த இயக்குனர்’ மற்றும் ‘சிறந்த வசனகர்த்தா’ விருதுகளை பெற்று தந்தது. ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் இத்திரைப்படம் தமிழில் ‘புரியாத புதிர்’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு இதுவே முதல் திரைப்படமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுனில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் அமைப்பதில் வல்லவர் என்பதும், எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமைப்புக்குள்ளும் சிக்காத ஒரு சிறந்த, திறமையான படைப்பாளி என்பதும் அவரது படைப்புகளின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. அவரது மிகச்சிறந்த படைப்புகள் வரிசை தர்கா, உட்கர்ஷா, சங்கர்ஷா, நிஷ்கர்ஷா, பெலடிங்கள பாலே, நம்மூர மண்டர ஹூவே மற்றும் பல என விரிகிறது. 

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப வல்லுநர்களும்:

தாகூர் அனூப் சிங்

சாய் தன்ஷிகா

தன்யா ஹோப்

கபீர் துஹான் சிங்

கிஷோர்

ஷ்ரத்தா தாஸ்

பிரபாகர்

வம்சி கிருஷ்ணா

ஷ்ரவன் ராகவேந்திரா

மஞ்சுநாத்

சுனில் குமார் தேசாய் – கதை மற்றும் இயக்கம்

தேவராஜ் ஆர் – தயாரிப்பாளர்

சஞ்ஜோய் சவுத்ரி – பின்னணி இசை

பி ராஜன், விஷ்ணு வர்தன் – ஒளிப்பதிவு

பி எஸ் கெம்பராஜூ – படத்தொகுப்பு

நிகில் முருகன் – மக்கள் தொடர்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here