தாதா 87 தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது

0

கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் வெளியான தாதா 87 திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.

தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, இதற்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தாதா 87 திரைப்படத்தில் ஒரு கதாநாயகி திருநங்கையாக நடித்தது, உலக சினிமா வரலாற்றில் முதல் முயற்சி என்ற சிறப்பைப் பெற்றது.

நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியாததால், தாதா 87 திரைப்படத்தை கோடைவிடுமுறையில் மீண்டும் திரையிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம். எனவே பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களும் இத்திரைப்படத்திற்கு உங்களது மேலான ஆதரவை மேலும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இத்திரைப்படத்தை தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து அனைத்துவித ஆதரவையும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுடன்,
கலை சினிமாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here