காதலர் தினத்தில் வந்த ‘காத்து வாக்குல ஒரு காதல் ‘ படத்தின் டீஸரை பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.
காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு.அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் ‘காத்து வாக்குல ஒரு காதல்’.

சீரடி சாய்பாபா வழங்கும் எஸ்.பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி .நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார். மற்றும் தெறி வில்லன் சாய்தீனா ,கல்லூரி வினோத் ,ஆதித்யா கதிர் ,லொள்ளு சபா ஆண்டனி ஆகியோருடன் புதுமுகங்கள் சிலரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு சுபாஷ் மணியன். எடிட்டிங் ஸ்ரீ ராஜ்குமார் இவர் ஏ.வெங்கடேஷ், எஸ்.எஸ்.குமரன் படங்களின் படத்தொகுப்பாளர்.
இசை ஜுபின் .இவர் பழைய ‘வண்ணாரப்பேட்டை’, ‘விண்மீன்கள்’ படங்களின் இசையமைப்பாளர் . பப்ளிசிட்டி டிசைன் ரெட் லைன்.

படம் பற்றி இயக்குநர் மாஸ் ரவி கூறும் போது ,” படம் பார்த்து விட்டு இப்படி ஒரு காதலி கிடைக்கவில்லையே என ஆண்களும் இப்படி ஒரு காதலன் கிடைக்கவில்லையே என பெண்களும் ஏங்கும் அளவுக்கான காதல் கதை.

காதலின் மகத்துவம் கூறும் இந்தப் டத்தின் டீஸரை காதலர் தினத்தில் வெளியிட்டோம். டீஸர் வெகுஜன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள் .நடிகர் யோகிபாபு, இயக்குநர்கள் சுப்ரமணிய சிவா ,விஜய்சந்தர் ஆகியோர் பாராட்டியதை மறக்க முடியாது.” என்கிறார்.

படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Teaser Link  
https://youtu.be/lBLrwvvnwfQ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here